Saturday, February 28, 2009

சுஜாதா - ஆண்டு 1 - அரங்கன் நலமா?


எனக்கும் வாத்தியாருக்கும் என்ன உறவு என்று நினைக்கும்போது, தேசிகன் சொல்வது போல் "நமக்கிங்கு உறவேல் ஒழிக்க ஒழியாது" என்றெல்லாம் கூற முடியாது. பரிச்சயம் அத்தனையும் அவரது எழுத்துக்களுடன் மட்டுமே. அம்பலம் சாட்டில் ஒரே ஒரு முறை பேசியிருக்கிறேன்.

அவரை எப்போது வாசிக்க ஆரம்பித்தேன் என்று கரெக்டாக சொல்ல முடியவில்லை. ஆனால், ஆரம்பித்தது கணேஷ்-வசந்த கதைகளிலிருந்து. அப்பருவத்தில், ஒரு பிரச்சினையை அணுகும் கணேஷின் திறமையும், வசந்த்தின் சுட்டித்தனமும், ஜொள்ளும் உடனடியாக ஒரு ஈர்ப்பை உண்டு பண்ணியது. கமல், ரஜினி என்று நடிகர்களுக்கு, அவர்கள் படங்களைப் பார்த்து தீவிர ரசிகர்கள் அமைகிறார்கள். ஆனால், சுஜாதா ஆணா/பெண்ணா என்று கூடத் தெரியாமல், அவரது தனித்துவமான எழுத்து என்ற அடையாளத்தின் பேரில் மட்டும், தீவிர ரசிகராகி, அவரை வாத்தியாராக ஏற்றுக் கொண்ட அக்கால இளைஞர் அனேகர். அடியேனும் அந்த கூட்டத்தில் ஒருவன்.

"பிரிவோம் சந்திப்போம்" ஏற்படுத்திய தாக்கத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கவிருக்கும் மகளுக்கு மதுமிதா என்று பெயரிட்டேன் :)

அந்த subtle (உறுத்தாத) ஹியூமர் அவர் எழுத்துகளில் (அது கதையோ/கட்டுரையோ) விரவி இருக்கும். Non technical ஆசாமிகளுக்குக் கூட புரியும்படியாக, அதே சமயம் சுவாரசியமாக நவீன டெக்னிகல் சமாச்சாரங்களைக் கூட, ஒரு கதை சொல்வது போல சொல்ல ஒரு ஆள் பிறந்து வர, பலப்பல ஆண்டுகள் ஆகலாம்.

இங்கு தமிழ் எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லை. அது போல, டெக்னிகல் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. வாத்தியார் போல எஞ்சினிய்ராக, விரிந்த வாசிப்போடு, ஆங்கிலம்/தமிழ் என்று இரண்டிலும் மிக்க புலமையோடு, மிக்க தன்னடகத்துடன் ஒரு ஆசாமி சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்கப் போவதில்லை :(

இந்த வருட புத்தக கண்காட்சியில், உயிர்மையில் அவரது "கண்ணீரில்லாமல்" என்ற சிறு கட்டுரைத் தொகுப்பை வாங்கினேன். என்ன அது "கண்ணிரீல்லாமல்" என்று பார்த்தால், வாத்தியார் யாப்பு, கர்னாடக/மேற்கித்திய சங்கீதம், ஐன்ஸ்டைன், இந்து மதம் ஆகிய சமாச்சாரங்களை நாம் ரொம்பவும் அழாமல் தன்னிடமிருந்து தெரிந்து கொள்ள அழைக்கிறார் என்று விளங்கியது :) நிஜமாகவே, யாப்பிலக்கணத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது, ஒரே வாசிப்பில், மனதில் நிற்கும் வண்ணம்!

அதான் வாத்தியார் எழுத்தின் சக்தி. யாப்பு சொல்லித் தரும்போது கூட அந்த நகைச்சுவை இருக்கிறதே, "தமிழ் பண்டிதர்களிடம் போகாதீர்கள். "எட்டடி தரவு கொச்சக் கலிப்பா" போன்ற சொற்கள் எல்லாம் கனவில் வந்து பயமுறுத்தும்" என்பார்! யாப்பு பற்றி இதை விட எளிமையாக யாரும் விளக்க முடியாது.

அது போல, 'ரத்தம் ஒரே நிறம்' நாவலில், முத்து என்ற நாவலின் கதாநாயகனுக்கும், மெக்கன்ஸி என்ற பரங்கியனுக்கும் நடக்கும் "கட்டிப்புடி" சண்டையை வர்ணிக்கும்போது, 'முத்து மேல் மெக்கன்ஸி.. மெக்கன்ஸி மேல் முத்து... நிலைமை சற்று குழப்பமாக இப்போது முத்துன்ஸியாக உருண்டார்கள்' என்பார் :)

இரண்டு பதிவுகளில் வாத்தியாரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தியிருக்கிறேன், அதாவது 200 ஆண்டுகள். சொல்லி 3 ஆண்டுகளுக்குள் அரங்கனைப் பார்க்க புறப்பட்டுப் போய் விட்டார். இல்லை, அவருக்கு மிகவும் பிடித்த திருமங்கையாழ்வாராகக் கூட இருக்கலாம்!

வாத்தியாரின் மறைவுக்குப் பிறகு வலைப்பதிவர்கள் எழுதிய அஞ்சலிப் பதிவுகளின் இணைப்புகள் இந்த எனது பதிவில் உள்ளன

சுஜாதா தன்னைப் பற்றி: என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக்குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

Monday, February 23, 2009

528. ஈழததமிழர் ஆதரவாக சென்னையில் நடந்த அமைதிப்பேரணி

நேற்று இனஒழிப்புக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பு (இலங்கை அரசின் இன ஒழிப்பை எதிர்த்து)ஏற்பாடு செய்திருந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டேன். பெரிய அளவில் கூட்டம் இல்லை என்றாலும், மக்களின் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது. சில புகைப்படங்கள் எடுத்தேன். 2 சிறு ஓட்டப் படங்களும் (வீடியோ) எடுத்தேன்.



ஃபாதர் ஜெகத் காஸ்பர் முன்னின்று நடத்திய பேரணி இது. War Memorial இல் தொடங்கிய நடைப்பேரணி ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் நிறைவடைந்தது. ஜெகத் காஸ்பர் சிறு உரை நிகழ்த்தினார். 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கலாம்.



முல்லைத்தீவு பகுதியில் 220000 தமிழர்கள் அவல நிலையில் தவிக்கையில், இலங்கை அரசு அங்கு 70000 பேர் இருப்பதாக பொய்ச் செய்தியை பரப்பி வருகிறது. வரும் வாரங்களில், போர் என்ற பெயரில், தமிழர்களை அழிப்பதற்கான சதியோ என்று அஞ்சுவதற்கு முகாந்திரம் இருக்கிறது. எப்படியாயினும், போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். புலிகளும், இலங்கை அரசும் பேச்சு வார்த்தை நடத்தியே ஆக வேண்டும், அப்பாவி தமிழர்களின் நல வாழ்வுக்காக. புலிகள், தாங்கள் தயார் என்று கூறியதாக ஒரு செய்தி இன்று பார்த்தேன்.




எந்த சாதி/மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், விடுதலைப்புலி ஆதரவு/எதிர்ப்பு நிலை எடுத்தவராக இருப்பினும், தனி ஈழத்தில் நம்பிக்கை வைத்திருந்தாலும் / இல்லாவிட்டாலும், இந்த சமயத்தில் பேராபத்தில் சிக்கியிருக்கும் , மிக்க அவல நிலையில் உழன்று கொண்டிருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக, கொடுங்கோல் சிங்கள அரசுக்கு எதிராக, மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டும்!

எ.அ.பாலா

Friday, February 20, 2009

527. திறந்தவெளிச் சுடுகாடாகும் ஈழத் தீவு!

ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, விகடனில் வந்துள்ள கட்டுரை இது. விகடனுக்கு நன்றி. இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து யாராவது வெளியிட வேண்டும். சிங்கள அரசின் அராஜகம், இன்னும் பலருக்கும் தெரிய வரும்!
எ.அ.பாலா
**********************************************

மகான் ரஜ்னீஷ் சொன்ன கதை, மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் பொருந்தும்!

மன்னன் ஒருவனின் கனவில் மரணம் தோன்றியது. 'உன்னைக் குறித்த நேரத்தில்,குறித்த இடத்தில் சந்திப்பேன்' என்றது. அதிலிருந்து தப்பிக்க,புத்திசாலிகள் அத்தனை பேரையும் அழைத்து ஆலோசனை கேட்டான். 'இவர்கள் முடிவுக்கு வருவதற்கு முன் மரணம் வந்துவிடும்.

எனவே, உன்னிடம் வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடு' என்று ஒரு கிழவன் ரகசியமாகச் சொன்னதும் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

18 மணி நேரம் ஓடியது குதிரை. 'அப்பாடா... இந்த இடத்துக்கு மரணத்தால் வர முடியாது' என்று மன்னன் பெருமூச்சுவிட்டுக் கீழே இறங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். தோளில் ஒரு கை விழுந்தது. 'சபாஷ்! இந்த இடத்துக்கு நீ நிச்சயம் வருவாய் என்றுதான் காத்திருக்கிறேன்' என்று பாசக் கயிற்றை வீசியதாம் மரணம்.

அந்த எமன் வீசியது பாசக் கயிறு. சிங்கள எமகாதகர்கள் வீசுவதற்குப் பெயர் பாதுகாப்பு வளையம். 'உயிருக்குப் பயந்தவர்கள் இங்கே வாருங்கள்' என்று அழைத்து, குண்டுபோட்டுக் கொல்கிறார்கள். அது பாதுகாப்பான மயானங்கள்!

எத்தனை தடவைதான் ஈழத்தின் சோகத்துக்கும் கொடூரத்துக்கும் வேறு வேறான வார்த்தைகளைத் தேட! வார்த்தைகள் தீர்ந்தாலும் வதைகள் தொடர்கின்றன. கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை அது தொடர்ந்து தொலைக்கத்தான் செய்யும்!

இப்போது ராணுவத்தின் இலக்கு புலிகள் அல்ல, அப்பாவித் தமிழர்கள். 'புலிகளை ஒழித்துவிட்டால், அடுத்து தமிழர்களுக்கு எதையாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், ஒட்டுமொத்தத் தமிழர்களையும் மொத்தமாக முடித்துவிட்டு, புலிகள் பக்கம் திரும்ப சிங்கள அரசு சதித் திட்டம் தீட்டுகிறது. 'அப்பாவிகளைக் கொல்லாதே!' என்று பல்வேறு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்ததும், அதை மறைப்பதற்கான தந்திரத்தை மகிந்தா அரசு யோசித்தது. அவர்கள் கண்டுபிடித்தது 'பாதுகாப்பு வளையம்' என்ற வார்த்தை.

பொதுவாக போர்கள் நடக்கும்போது, மருத்துவமனைகள், மத வழிபாட்டு இடங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் 'பாதுகாப்பான இடங்கள்' என அறிவிக்கப்படும். அங்கு குண்டுகள் வீசக் கூடாது என்பது உலக நீதி. ஆனால், எல்லா அநீதிகளையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ராஜபக்ஷே அரசு, அதைப் 'பாது காப்பு வளையம்' என்கிறது.

'சில பகுதிகளைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளோம். அங்கு பொதுமக்கள் வந்துவிட வேண்டும். இதற்கு 48 மணி நேரம் கெடு' என்று சிங்கள அரசு அறிவித்தது. அதாவது, மக்களை காட்டை விட்டு வெளியில் வரச் சொல்லி, கெடு விதித்தது. இதைத்தான் இங்குள்ள காங்கிரஸ் கட்சி, 48 மணி நேரப் போர் நிறுத்தம் என்று சொல்லிப் பெருமைப்பட்டது. இப்படி ஒரு தகவல் அறிவிக்கப்பட்டதுமே அப்போது கொழும்பில் இருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர், 'தமிழர் வாழ்வதற்குப் பாதுகாப்பான இடம் என இலங்கையில் ஓர் அங்குலம்கூட இல்லையே? எங்கு வரச் சொல்கிறார்கள்?' என்று கிண்டலடித்தார்.

காட்டுக்குள் பல மாதங்களாக அடைந்துகிடக்கும் அப்பாவி மக்களில் சிலர், அரசாங்கத்தின் வார்த்தையை நம்பி, அந்தப் பாதுகாப்பான இடத்துக்கு வர, அங்கு போய் குண்டு போட்டுக் கதையை முடிக்கிறது சிங்கள அரசு.

இங்கு மக்கள் படும் சிரமங்கள் ஜெயவர்த்தனே காலத்தைவிடப் பல மடங்கு மோசமானது. ''எங்கள் மக்கள் முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக்குள் மட்டும் இரண்டரை லட்சம் பேர் இருக்கிறார்கள். யாருக்கும் வீடு கிடையாது. குடிசை கிடையாது. வெறும் சாக்கு, பிளாஸ்டிக் பாய்களை வைத்து மரங்களுக்கு மத்தியில் இருக்கும் அகலத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள்.

பெரும்பாலான நேரம் பதுங்கு குழிகளில்தான் எல்லாரும் இருக்கிறார்கள். காலைக் கடன்கள் கழிப்பது, சமையல் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் பதுங்கு குழியில்தான். இரவு பகலாக குழிக்குள் உட்கார்ந்திருக்கும் அவஸ்தையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. விமானம் வரும் சத்தம்
கேட்டால், அத்தனை பேரும் பூமிக்குக் கீழே புதைந்து கிடப்பார்கள். குண்டு விழுந்தால் அப்படியே சமாதி!''

முல்லைத் தீவு மாவட்டம், தேவிபுரம், வள்ளிபுனத்திலிருந்து இடம்பெயர்ந்து அதிகாலையில் மூன்று குடும்பங்கள் வந்து சேர்ந்தன. ஐந்து மணி இருக்கும். அந்த நேரம் பார்த்து அவர்கள் மீது குண்டுகள் விழுந்தன. 19 பேர் அந்த இடத்தில் செத்துப்போனார்கள். 61 பேர் பலத்த காயமடைந்து துள்ளத் துடிக்கக்
கிடந்தனர். காயம் அடைந்தவர்களை முல்லைத் தீவு மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். மதியம் ஒரு மணிக்கு அங்கும் விழுந்தது குண்டு. காயம்பட்டு வந்தவர்கள், அங்கேயே பிணமானார்கள். இது நடந்தது கடந்த 12-ம் தேதி.

அதற்கு முந்தைய நாள் தேவிகுளம் நோக்கி நள்ளிரவு 3.15 மணிக்கு நடந்து வந்துகொண்டு இருந்த 22 பேர் குண்டுவீச்சில் செத்தார்கள். இடம்பெயர்ந்து வருபவர்கள் தாற்காலிகமாகத் தங்கியிருக்கும் கொட்டகைகள் மீதும் குண்டுகள் விழுகின்றன. காயம்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை மீது கடந்த 6-ம் தேதி விழுந்த குண்டுவீச்சில் 61 பேர் இறந்துபோனார்கள். 'ஆஸ்பத்திரிக்குப் போனா, சாவுதான்' என்பது தமிழகத்தில் ஜோக். ஈழத்தில் அதுதான் கடைசி ஷாக்!

மருத்துவமனைகளுக்கும் எந்த மருந்தையும் கடந்த ஆறு மாதமாக வரவிடவில்லை. வந்தவை அனைத்தும் காலியாகி, வெறும் பேண்டேஜ்கள் மட்டும் வைத்து, வாசலில் பாய் விரித்துப் படுக்கவைத்துவிடுகிறார்கள். வலியால் துடிப்பவர்களைப் பார்த்து டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சி அடைவதில்லை. அவர்களிடம் வேறு வழியும் இல்லை. முல்லைத் தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களை அங்கிருந்து வெளியேற கொழும்புவில் இருந்து உத்தரவு. இனி சும்மா படுக்கவைத்து கட்டுப் போடக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். இப்படி எல்லா மருத்துவமனைகளும் அறிவிக்கப்படாத சுடுகாடுகளாக மாறிவிட்டன.

மிக அதிக பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கப்பல் மூலம் வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டுபோக செஞ்சிலுவைச் சங்கம் முயற்சி எடுத்தது. முல்லைத் தீவு மாத்தளன் கடலில் இந்தக் கப்பலை ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்த கடற்படை அனுமதிக்கவில்லையாம். சுமார் 240 பேர் மட்டும் அவசர அவசரமாக கப்பலில் ஏற்றப்பட்டார்கள். மற்றவர்கள் நொந்துபோய் அங்குள்ள மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதோடு செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

இன்னொரு பக்கம் பார்த்தால்....

உயிருடன் பாதுகாப்பு வளையத்துக்குள் வருபவர்கள் தனித் தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதில் முதியோர்கள், குழந்தைகள் வேறு பக்கமும் இளைஞர்கள், இளம் பெண்கள் தனியாகவும் அனுப்பப்படுகிறார்கள். சோறு, தண்ணீர் இல்லாத இடங்களில் முதியோர்கள் அவஸ்தைப்பட... இளைஞர்கள், இளம் பெண்களுக்கான சித்ரவதை இன்னொரு புறம் ஆரம்பமாகிறது.

விசாரிக்கப்போவதாக ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வருவார்கள். ''இளைஞர்களை முடிந்த வரை கொடுமைப்படுத்திவிட்டுச் சுட்டுவிடுவது இவர்களின் வேலை. வேறு எதுவும் விசாரணை செய்வதில்லை. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், கோரங்களின் உச்சம். இளம்பெண்களின் கண்களை முதலில் கட்டுவார்கள். கைகளைப் பின்புறம் சேர்த்துக் கட்டுவார்கள். அதன் பிறகு அவர்களின் ஆடைகளைக் கிழித்து அம்மணமாக்கிவிட்டு, உதைத்து ஓடவிடுகிறார்கள். எங்கு போகிறோம்... என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாமல், பயத்தில் ஒரு பெண் ஓட, வாய்ப்பான வசதியான இடங்களில் சிங்கள மிருகங்கள் தங்கள் பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும். எத்தனையோ பேர் அவள் மீது விழுந்து புரண்ட பிறகு, அவள் உறுப்புகளைச் சிதைத்து சுட்டுக் கொன்றுவிடுவதுதான் அங்கு நடக்கிறது'' என்று சொல்லப்படும் தகவல்களைக் கேட்கவே நெஞ்சு நடுங்குகிறது.

அனுராதபுரம், பொலநறுவை மயானங்கள், அதை ஒட்டிய காட்டுப் பகுதிகள், வவுனியாவின் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில்தான் இந்தக் கொடூரக் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றனவாம். அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போன சிங்களத் தொழிலாளர்கள், தங்கள் பகுதிகளில் பல பெண்களின் பிணங்கள் நிர்வாணமாகக் கிடந்ததாக வெளியில் சொன்னார்கள். வன்னியில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாறிக்கொள்ள வவுனியாவுக்கு அடைக்கலம் புகும் மக்களைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் இப்போதைய ஈழமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

புலிகள் வசம் இருக்கும் புதுக் குடியிருப்பையும், அதைத் தாண்டிய முல்லைத் தீவையும் கைப்பற்றி ஏக இலங்கையை பிப்ரவரி முதல் நாள் விடுதலை செய்யப்போவதாக அறிவித்த மகிந்தா ராஜபக்ஷே அரசு, இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் அந்தச் செய்தியை அறிவிக்காமல் மக்களைக் கொல்வதில் அக்கறையுடன் இயங்கி வருகிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் என்று சிங்களக் கட்சிகள் சொல்ல ஆரம்பித்துள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனா அமைப்பு, 'தமிழர்கள் யாரையும் விடக் கூடாது' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்குக் காத்திருந்தது மாதிரி, கோத்தபய ராஜபக்ஷே ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

''புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வர வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா, இல்லையா என்று நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. புலிகள் தங்கள் வசமிருந்த மக்கள் அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி கொடுத்துள்ளார்கள். எனவே, அனைவரும்
புலிகள்தான். ஒரு குடும்பத்தில் யாரோ ஒருவர் இறந்த மாவீரராகவோ அல்லது இப்போது அமைப்பில் இருக்கும் போராளியாகவோ உள்ளார்கள். எனவே, எந்தக் குடும்பமும் எங்களுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடியாது. மருத்துவமனைகளைத் தாக்குவதாகச் சொல்கிறார்கள். அதுவும் எங்களின் ராணுவ இலக்குதான்'' என்று தெளிவாக அறிவித்துவிட்டார் கோத்தபய ராஜபக்ஷே.

''இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நித்தமும் இந்த தாக்குதலைத் தொடர சிங்கள
தரப்பு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்புறம் மயானக் கரைக்கு வெள்ளையடித்து ரிப்பன் கட் பண்ணப்போகிறதா ஐ.நா.சபையும் உலக சமுதாயமும்?'' என்று ஈழ மக்கள் கதறுகிறார்கள்.

அது பற்றி நமக்கென்ன கவலை?

நமக்கு இலங்கையை கிரிக்கெட்டில் ஜெயித்தது போதும்தானே!.

Thursday, February 19, 2009

526. நீதிக்குத் தலைகுனிவு - தினமணி தலையங்கம்

கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போது, இங்கே நடப்பது மக்களாட்சிதானா, இது நல்லாட்சியா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

எந்தவொரு மனிதனுக்கும் தனது கருத்துகளை நியாயமான முறையில் எடுத்துச் சொல்லும் உரிமை உண்டு. அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொருத்த விஷயம்.

உயர் நீதிமன்றத்தில் நடந்தேறிய சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் மூன்று. நீதிபதிகளின் முன்னால், நீதிமன்ற அறையில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஒரு கீழ்த்தரமான மனநிலையுடையவர்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள் என்பது முதலாவது அதிர்ச்சி. கறுப்புச் சீருடை அணியாமல் முன்கூட்டியே திட்டமிட்டு, கையில் முட்டையுடன் நீதிமன்ற அறையில் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் வழக்கறிஞர்கள் என்பதைவிட கிரிமினல்கள் என்பது அல்லவா உண்மை! இது இரண்டாவது அதிர்ச்சி. மூன்றாவது, நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி சந்துரு இருவரும் இருக்கும்போது, அவர்கள் கண் முன்னால் இப்படியொரு அராஜகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்றால், நீதிபதிகளுக்கு இந்த வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்பது.

சமீபகாலமாகவே, சட்டப்படிப்பு படித்து விட்டதாலேயே சட்டத்தைத் தாங்கள் மதிக்க வேண்டியதில்லை என்கிற மனோபாவம் பல வழக்கறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. கடந்த ஆண்டு சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், முருகானந்தம் என்கிற நீதிபதியை, நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது வேலை நிறுத்தத்தின்போது, பிராட்வே பகுதியில் ஒரு சைக்கிள் கடையை 24 வழக்கறிஞர்கள் சூறையாடியதும், அவர்களைக் கைது செய்யப்போன காவல்துறையினரையே அவர்கள் தாக்க முற்பட்டதும் வழக்கறிஞர் சமுதாயத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியது.

வழக்கறிஞர்களின் அத்து மீறிய செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருப்பது, எந்த அளவுக்கு ஒரு கௌரவமான, மரியாதைக்குரிய தொழில் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. முன்பொருமுறை, அலாகாபாத் நீதிமன்றத்தில் காவல்துறையினரைப் பற்றி குறிப்பிடும்போது, "யூனிஃபாரத்தில் உலவும் ரௌடிகள்' என்று ஒரு நீதிபதி விமர்சித்தார். பிறகு அந்தக் கருத்து திரும்பப் பெறப்பட்டது என்பது வேறு விஷயம். இப்போது, அதே கருத்து வழக்கறிஞர்களுக்கும் பொருந்திவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும் போலிருக்கிறதே!

விடுதலைப் புலிகளை எதிர்க்கிறார் என்பதற்காக சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியானால், மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி விடுதலைப் புலிகளை விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அல்லவா இவர்கள் தாக்கி இருக்க வேண்டும்? ஒருவேளை, அதற்கு தைரியமில்லாத காரணத்தால், சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கித் தங்களது வீரத்தைப் பறைசாற்ற நினைத்தார்களோ, என்னவோ!

எந்த அளவுக்குத் தரந்தாழ்ந்தவர்களாக இருந்திருந்தால், நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய அந்த மூன்றாம்தர வழக்கறிஞர்கள் (அவர்களை வேறு எப்படித்தான் அழைப்பது?) தாங்கள் வழக்காடும் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் முன்னால் முட்டைவீசித் தாக்குதல் நடத்தி இருப்பார்கள்? இதில் வேடிக்கை என்னவென்றால், நீங்களோ நானோ இதுபோல நடந்திருந்தால் அடுத்த வினாடியே, நீதிமன்ற அவமதிப்பு என்கிற பெயரில் நாம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருப்போம்.

எழும்பூர் பெருநகரக் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை. "சமரசம்' ஏற்பட்டு விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதேபோல, வழக்கறிஞர்களின் சட்டவிரோதமான செயல்கள் பலதும் கண்டும் காணாமலும் நடவடிக்கை எடுக்கப்படாமலும் விடப்படுகின்றன. நடவடிக்கை எடுத்தால், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள். அதனால், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள், நீதிபதிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை.

தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தலைமை நீதிபதியோ, நீதிபதிகளோ இவர்களை நீதிமன்ற அவமதிப்புக்காக, தண்டிப்பார்களா? இந்த வழக்கறிஞர்களின் வழக்காடும் உரிமை ரத்து செய்யப்படாவிட்டால், நாங்கள் வழக்குகளை விசாரிப்பதில்லை என்று நீதிபதிகள் அறிவிப்பார்களா? சரி, பார் கவுன்சிலாவது, இதுபோன்ற தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்து, தொழிலில் இருந்து வெளியேற்றுமா? அரசாவது, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை தொடருமா? எதுவுமே நடக்காது என்பதுதான் நிஜம்.

நீதி கேட்டு நாம் நீதிமன்றத்துக்கு ஏன் போகிறோம்? நீதிபதி நியாயம் வழங்குவார் என்பதால். அந்த நீதிபதிக்கே மரியாதை இல்லை என்றால், மக்களுக்கு இருக்கும் அந்த நம்பிக்கையும் தகர்ந்து விடுகிறதே!

சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் அரங்கேற்றி இருக்கும் வன்முறை, அராஜகம், ஈழத்தமிழர்கள் மீதுள்ள அனுதாபத்தையும் குலைக்கும். மக்களுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கையையும் குறைக்கும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றும் உரிமையை ரத்து செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையைத் தொடர்வதுதான், இனியும் இதுபோன்ற அநாகரிகம் தொடராமல் தடுக்கவும், நீதிமன்றத்தின் கண்ணியம் காப்பாற்றப்படவும் ஒரே வழி.

நன்றி: தினமணி

Tuesday, February 17, 2009

525. சுப்பிரமணிய சுவாமியைத் தாக்கி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் அராஜகம்

இன்று, ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, அவரது புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளார். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்கள், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அராஜகத்தில் ஈடுபடுவது, கடுமையான கண்டனத்துக்குரியது. சமூகத்தில், சட்டத்தை மதித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழக்கறிஞர்கள், பொது மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் மரியாதையை குலைக்கும் வண்ணம் நடந்து கொண்டுள்ளனர்.

பொதுவாகவே, இவர்களின் சமீபகால நடவடிக்கைகள் எதுவும் சிலாக்கியமாக இல்லை. எதற்கெடுத்தாலும், வேலை நிறுத்தம், நீதிபதிகளையே கேரோ செய்தல் என்று பலவற்றைக் கூறலாம். அரசியல் கட்சிகளை சார்ந்து பல வழக்கறிஞர்கள் செயல்படுவதே இதற்கு முக்கியக் காரணம். வழக்கறிஞர் தொழில் என்பது அரசியல் சாரா தொழிலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

சு.சுவாமியின் ஈழப்பிரச்சினை குறித்த கருத்துகள் எனக்கும் ஏற்புடையதல்ல. சில சமயங்களில் உளறுகிறார் என்று கூட சொல்லலாம். அதற்காக, அவர் மீது வன்முறையை பிரயோகிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கருத்துரிமையை மதிக்காத இந்த போக்கு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் :-(


செய்தி கீழே:

எ.அ.பாலா

***************************
சென்னை, பிப் 17 (டிஎன்எஸ்) சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அப்போது திடீரென கோர்ட்டுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள், இலங்கை தமிழருக்கு எதிராக பேசுவதால் சுப்பிரமணிய சுவாமியை தாக்கியதாக அவர்கள் கோஷமிட்டனர். தங்கள் கண் முன்னிலையிலேயே தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.

தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது. இதுதொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.

இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது. இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.

இந்த நிலையில் அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளுமாறு கோருவதற்காக டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது சில வழக்கறிஞர்கள், சுப்பிரமணியம் சுவாமியின் இலங்கை கருத்துக்களை ஆட்சேபித்து குரல் எழுப்பியவண்ணம் அவர் மீது அழுகிய முட்டைகளை வீசினார்கள்.

தங்கள் முன்பாகவே இந்த சம்பவம் நடைபெற்றதை கண்டித்த நீதிபதிகள், முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

அவரைப் பார்த்த, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வக்கீல்கள் சிலர் ஆவேசமாக ஓடி வந்தனர்.

சுப்பிரமணியம் சுவாமியை காவல் துறையினர் பாதுகாப்பாக அவரது கார்வரை அழைத்து சென்று விட்டார்கள். (டிஎன்எஸ்)
******************************************

நன்றி: Chennaionline.com

Tuesday, February 10, 2009

524. பெண் புலி நடத்திய தற்கொலை படை தாக்குதல்

ஈழத்தமிழர் பிரச்சினை உலக நாடுகளின் கவனத்திற்கு வந்து, போர் நிறுத்தத்திற்கு இலங்கைக்கு பல தரப்பிலிருந்தும் நெருக்கடி தரப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், புலிகள் இப்படியொரு தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டாம். எது எப்படியிருப்பினும், இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. போரைத் தொடர இலங்கை அரசுக்கும், சிங்கள வெறியர்களுக்கும் ஒரு காரணம் கிடைத்து விட்டது. மேலும், அப்பாவித் தமிழர்கள் பலியாவார்கள் :-(

எ.அ.பாலா
***************************************

பிற்சேர்க்கை:

என்னை ஆபாசமாகத் திட்டி இப்பதிவை நீக்கும்படி ஒரு பின்னூட்டம் வந்தது. ஐபி முகவரியை பத்திரமாக வைத்திருக்கிறேன்!

பிரச்சினை என்னைத் திட்டியது பற்றி அல்ல! நான் சொல்ல வந்ததின் நோக்கம் புரியாமல், நான் என்னவோ சிங்கள அரசு செய்ததற்கு/செய்து வருவதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் எழுதியிருப்பதாக சிலருக்குத் தோணலாம்! நிச்சயம் உண்மை அதுவல்ல! இலங்கை அரசை ஆதரிப்பதற்கு எனக்கு எந்த முகாந்திரமும் கிடையாது!

முதலில் இருந்தே, ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் அக்கறையின்மை குறித்தும், போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்தும் நான் தொடர்ந்து எழுதி வருவதை என் வலைப்பதிவை வாசிக்கும் நண்பர்களும், டிவிட்டர் (twitter.com) நண்பர்களும் அறிவார்கள். சிங்கள ராணுவத்தின் வெறி அப்பாவி தமிழ் மக்கள் மேல் தீவிரமாகத் திரும்புமே என்ற ஆதங்கத்தில் தான் நான் எழுதியது. சிலர் திரிக்க முனைகிறார்கள் :-(

டமில்நெட் தளத்தில், Reports from Vanni indicate that the civilian casualties at the military checkpost claimed as 'IDP rescue centre' by the Sri Lanka Army (SLA) was in fact due to gunfire at the civilians by the SLA after a bomb blast, according to civilians who escaped the scene back to LTTE territory என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சிவிலியன் உயிரிழப்புக்கு சிங்கள ராணுவமே காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.

புலிகளால் பட்ட பாட்டை விட, இலங்கை அரசால், ஈழத்தமிழர்கள் பல காலமாக பல இன்னல்களைச் சந்தித்துள்ளனர் என்பதே என் கருத்து. போர்/வன்முறை நிரந்தரத் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது. பேச்சுவார்த்தை மூலமே, தீர்வு காண முடியும். இந்தியா தலையிட விரும்பாத நிலையில், அமெரிக்கா/பிரிட்டன்/கனடா உருப்படியாக ஏதாவது செய்ய முன் வந்தால் மகிழ்ச்சியே.

எ.அ.பாலா

***********************************************
கொழும்பு: இலங்கையில் பெண் விடுதலைப் புலி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், ராணுவ வீரர்கள் 20 பேர் உட்பட 28 பேர் பலியாயினர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இப்படி சண்டை நடக்கும் பகுதியில் இருந்து பொதுமக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கடந்த சில நாட்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேறி வருபவர்களை விசாரித்து, பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக, ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விஸ்வமடு அருகே சுந்தராபுரம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி வழியாக நேற்று பலர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்பாவி மக்களோடு ஊடுருவி வந்த பெண் விடுதலைப் புலி ஒருவர், சோதனைச் சாவடி அருகே வந்ததும், தன் உடலில் கட்டியிருந்த பயங்கர குண்டுகளை வெடிக்கச் செய்தார்.இதில், அதிகாரிகள் இருவர் உட்பட ராணுவத்தினர் 20 பேர் பலியாயினர்; அப்பாவி தமிழ் மக்கள் எட்டு பேர் இறந்தனர். இதுதவிர, 50 தமிழர்கள் காயமடைந்தனர். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.காலை 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. முல்லைத் தீவு அருகே போர் முனையில், கடந்த சில நாட்களாக இதுபோன்ற தாக்குதல்களை நடத்த புலிகள் பலமுறை முற்பட்டனர்.இருந்தாலும், அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று அவர்கள் தங்களின் தாக்குதலை நடத்தி விட்டனர். இந்த மாதத்தில் புலிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் தொடர்பாக முதல் கட்டமாக கிடைத்த தகவல்களில் 28 பேர் இறந்ததாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறப்பு மற்றும் காயமடைந் தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததும், அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். மருத்துவக் குழுவினரும் அங்கு விரைந்தனர். காயமடைந்த பலர் கிளிநொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.கடந்த 4ம் தேதி யானையிறவு அருகே சாலை என்ற இடத்தில், 13 வயது சிறுமி மூலம் தற்கொலைப் படை தாக்குதலை நடத்த புலிகள் திட்டமிட்டனர்; ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் மக்களை நாங்கள் காப்பாற்ற முற்படுகிறோம். ஆனால், புலிகள் அதைச் செய்ய விடுவதில்லை. அப்பாவி மக்கள் மத்தியில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி அவர்களைக் கொன்றுள்ளனர். இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகளின் "கரும் புலிகள்' தான் பயன் படுத்தப்பட்டு வருகின்றனர்' என, இலங்கை மீடியாத் துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யபா கூறினார்.

நன்றி: தினமலர்

Monday, February 09, 2009

523. ஒரு ஆடு ஒரு காக்கை

இடத்தைக் கொடுத்தால்


மடத்தைப் பிடிப்பது இது தானா? ;-)

Sunday, February 08, 2009

522. கலைஞர் டிவி வாழ்க!

சேனல் சர்ஃபிங்க்கு நடுவில் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் 4-5 நிமிடம் நின்றேன்.. ஒரு போட்டிக் குழு சிறப்பாக பரதநாட்டியத்தில் சிவநடனம் ஆடி முடித்த பின் அது பற்றி நடுவர்கள் பேச ஆரம்பித்தனர்..

நடுவர்களில் ஒருவரான ரம்பா சிவ நடனங்களின் வகைகள் பற்றிச் சொல்ல ஆரம்பிக்க, கலா மாஸ்டர் ஓ உங்களுக்கு மந்திரம் எல்லாம் தெரியுமா என்று கேட்க, ரம்பா கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, ஆனால் நான் சிவ பக்தை என்றார்.. உடனே கலா மாஸ்டர் நீங்கள் கூறி வழிபடும் மந்திரம் ஒன்றை எங்களுக்காக சொல்லித் தான் ஆகவேண்டும் என்று ரொம்பவே வற்புறுத்தினார்..

உடனே, ரம்பா தன் இருக்கையிலேயே கண்களை மூடி, கைகளைக் குவித்து இதழில் தவழந்த மந்தஹாசம் மறையாமல், சொல்ல ஆரம்பித்தார்.. "சதுர்பி: ஸ்ரீகண்டை: சிவயுவதிபி:" என்ற சௌந்தர்ய லஹரி சுலோகத்தை பக்தி பாவத்துடனும், சில உச்சரிப்புப் பிழைகளுடனும் சொன்னார்..

அதற்குப் பிறகு 28 சிவ தத்துவங்களைக் கூறும் மந்திரம் ஒன்றையும் சொல்லி முடித்தார். பிறகு சில நொடிகள் கழித்து கண் திறந்தார்.

கலா மாஸ்டர் கரகோஷம் செய்தார். பார்வையாளர்கள் அதில் இணைந்தனர். நல்ல கடவுள் பக்தி இருக்கும்மா உனக்கு, ரொம்ப நல்ல விஷயம் என்று கலா மாஸ்டர் ஆசிர்வதித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இப்படி ஒரு சம்பவம், நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது.

தங்கள் இந்துத் தன்மையை எந்தக் தயக்கமும் இல்லாமல் பிரபலங்கள் வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி வந்தது .... கலைஞர் டிவியில்! வாழ்க!

Saturday, February 07, 2009

ஈழமும் துரோகமும் - கி.அ.அ.அனானி


கி அ அ அனானியிடமிருந்து ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு மேட்டர் மெயிலில் வந்தது, அவர் ஸ்டைலில் "துரோகம்" மற்றும் "பிராப்பர்டி ரைட்" குறித்து ஒரு விளாசல். எப்போதும் போல் கொஞ்சம் எடிட் பண்ண வேண்டியிருந்தது, ஆனால் சூடு குறையாத வகையில் :) மேட்டரைப் பதிந்ததற்கான காரணம், பழசு தான், அதாவது கருத்துச் சுதந்திரம் !!! கி அ அ அ மேட்டர் கீழே, வாசிக்கவும்.
எ.அ.பாலா
************************************************

இலங்கையில் போரும் படுகொலைகளும் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் நடந்த / நடக்கும் துரோகங்களெல்லாம் போதாதென்று, நடந்ததையெல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் முதல்வர். பாவம்.. அவரும் என்ன செய்வார் , சுமார் 50 வருடங்களாக நடப்பது போல் "நெருப்பு பற்றி எரியும் பின் தானாக அடங்கி நீறு பூத்து விடும். பின் தனக்குத் தேவையான போது ஊதிப் பெரிதாக்கிக் கொள்ளலாம்" என்று எப்போதும் போல் கனவு கண்டு கொண்டிருந்தவரின் கனவில் மண்ணைப் போடும் படியாக தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இன்று அவரது ஆதரவாளர்களே வெறுத்துப் போகும் படியான அறிக்கைகளையும் ,அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றுவதில் முனைந்துவிட்டார்.

இதன் உச்ச கட்டம்தான் முதல் எதிரியாகக் கருதியவரையும், துரோகி, முதுகில் குத்தியவன், தமிழன் இல்லை என்று இருந்த மட்டும் வாய்க் கொழுப்போடு வசை பாடிவிட்டு இன்று வாய் கூசாமல் "எனது நண்பர் எம் ஜி ஆர் " என்று சொந்தம் கொண்டாடுவதும், தங்களது முயற்சியாலே தான் ஐநாவும் ,அமெரிக்காவும், இங்கிலாந்தும் ,ஜப்பானும் அறிக்கைகள் விட்டு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றன என்று எழுதுவதும்.

இப்படி அடுத்தவர் செய்ததை எல்லாம் , ஏதோ தன்னால் தான் நடந்தது என்று இவர் சொல்வது புதிதல்ல என்றாலும், தனது இன மக்களுக்காக உலகில் பல்வேறு நாடுகளில் உழைத்து வரும், ஆதரவு திரட்டும், போராட்டம் நடத்தும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் முயற்சிகளை, சரியோ தவறோ இதற்காக தன்னுயிரைத் தந்த முத்துக்குமார் போன்ற இளைஞர்களது அளவிட முடியாத தியாகங்களை, இதை விட கேவலமாக களவாடவும், கொச்சைப் படுத்தவும் முடியுமா என்பது சந்தேகமே.

அடுத்து ஆட்சியைத் துறக்க வேண்டாம் என்று இலங்கைத் தமிழர்களே கடிதம் மூலம் சொன்னார்களாம்!!! அதனால்தான் ஆட்சித் துணியை இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறாராம். முதலில் இவரை ஆட்சியை துறக்கத் தயார் என்று அறிக்கை விடச் சொல்லி யாராவது வற்புறுத்தினார்களா என்ன? ஆட்சியைத் துறக்கவும் தயார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வெற்றுச் சவடால் அடிக்கிறீர்களே , இன்னும் ஒரு புல்லையும் பிடுங்கவில்லையே என்றுதான் கேட்கிறார்கள், அதற்காக "உருப்படியான" முன் முயற்சி ஏதேனும் எடுக்கப் பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவது ஞாயம் தானே?

அடுத்ததாய் இந்த மத்திய அரசின் பதவிக் காலம் முடிந்து, அடுத்த தேர்தலும் முடிந்த பின், இவர் மத்தியில் பதவியைப் பகிர்ந்தோ அல்லது எதிர்க் கட்சியாகவோ விடப் போகும் அறிக்கைகளுக்காக இளிச்சவாய்த் தமிழன் "கண்கள் பனிக்க, நெஞ்சம் இனிக்க" காத்துக் கொண்டு தான் இருக்கப் போகிறான். வேறென்ன செய்வான்? கழுதைக்கு வாக்கப் பட்டால்...என்ற பழமொழியச் சொன்னவனும் தமிழன்தானே.

இதில் கருணாநிதியைத் திட்ட, எங்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது, வேறு எவனுக்கும் உரிமை இல்லை என்று அவனவன் இணையத்தில் "ப்ராபர்டி ரைட்" கொண்டாடிக் கொண்டு நெஞ்சு விம்ம ஒப்பாரி வைக்கிறான்கள். அடுத்த லெவல் அடிப்பொடிகள் அதற்கு அமாம் ஆமாம் என்று பின்னூட்ட ஜால்ரா தட்டுகின்றன.

எவனுக்கும் ரைட் இல்லை என்று சொல்லும் "அவனுக்கு" இந்த இடத்தில் ஒரு வார்த்தை. "திட்டுறவன் எப்பவும் போல கன்ஸிஸ்டண்டா திட்டிக் கொண்டுதான் இருக்கிறான், நீ தான் முன்னாடி கண்னை மூடிக்கிட்டு ஜால்ரா அடித்துக் கொண்டு இருந்தாய். இப்போது காலத்தின் கட்டாயத்தினால் கொஞ்சம் "தெளிஞ்சு" திட்ட ஆரம்பித்து இருக்கிறாய். சுய மூளையோட சிந்திக்கிறவன் , ரெகுலரா திட்டுரவன் வேணுமுன்னா உன் மேல ப்ராபர்டி ரைட் கேஸ் போடலாம். என் வேலையை நீ ஏண்டா செய்கிறாய்" என்று.


இப்படி 'திட்ட உரிமை' கொண்டாடும் தொண்டரடிப் பொடிகளுக்கும், பரம்பரையாக பராமரிப்பதால் கோயில் தங்களுக்கு "மட்டுமே" சொந்தம் என்று "பிராப்பர்டி ரைட்" பேசும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லையே, அம்பலவாணா ? ;-)



கி அ அ அனானி

Tuesday, February 03, 2009

520. அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்

சென்னை: இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்றை கூட்டத்தில் பங்கேற்க அவர் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து இன்று காலை அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதை முடித்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் அங்கு திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையான சுயாட்சி மற்றும் முழுமையான அதிகாரப்பகிர்வு ஆகியவை கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள், அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 7ம் தேதி சென்னையில் பிரசார கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று சிலர் நினைக்கிறார்கள். அண்ணனும் சாக மாட்டான். திண்ணையும் காலியாகாது.

திமுகவையும், காங்கிரஸையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அந்த சிலரின் சதி பலிக்காது. அதேபோல பந்த் நடத்தி அரசைக் கலைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டினார்.


நன்றி: தட்ஸ்டாமில்.காம்

Saturday, January 31, 2009

மங்களூர்: தாலிபானை காப்பியடிப்பதா இந்துக் கலாச்சாரம்?

மங்களூர்: தாலிபானை காப்பியடிப்பதா இந்துக் கலாச்சாரம்?
நா.மகேந்திரன்

மங்களூரில் நடந்த நிகழ்சிகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை. அங்கு உள்ள கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த ஸ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர், அங்கு மது அருந்தி நடனமாடிக் கொண்டிருந்த ஆண்கள், இளம் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக ‘ஸ்ரீராம சேனா’ அமைப்பின் தலைவர் உட்பட 17 பேரைக் கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதைக் கர்நாடகா மற்றும் தேசிய பாரதீய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பல இந்து அமைப்புகளும், திரு.அத்வானி போன்ற பெருந்தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து ஸ்ரீராம சேனா தலைவர்கள், அங்கிருந்த பெண்கள் இந்திய கலாச்சாரத்துக்கு புறம்பாக நடந்துகொண்டதால் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.
அட, இதுதான் இந்திய கலாச்சாரமா தோழர்களே? இந்தியக் கலாச்சாரம் என்றால் என்ன? அதன் பிரதிபலிப்பாகப் பெண்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா? ‘பப்’ போன்ற இடங்களில் பெண்கள் செல்வது இந்திய கலாச்சாரத்துக்கு இழுக்கு என்றால் அங்கு ஆண்கள் செல்வது…
இதுவரை எத்தனை ஆண்களை இதற்காக நீங்கள் தாக்கியுள்ளீர்கள்? அதற்கு தைரியமிருக்கிறதா? ஆண்களிடம் காட்டமுடியாத உங்களது வீரத்தைப் பெண்களிடம் காட்டியுள்ளீர்களா?

இந்தியக் கலாச்சாரத்துக்கு இது புறம்பானது என்றால் அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யுங்கள். எது இந்தியக் கலாச்சாரம் என்பதைப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதைச் செய்யாமல் தாலிபான் பாணியில் பெண்களை அடித்து உதைப்பதும், உங்களை கலாச்சாரக் காவலர்களாகக் கற்பனை செய்துகொள்வதும் மூடத்தனமில்லையா?
அடுத்ததாக, இந்த கலாச்சாரத் தூய்மையின் முடிவுதான் என்ன? அரைகுறை ஆடையணிகிறார்கள் என்று இன்னொரு பேட்டியில் ஒரு ஸ்ரீராம சேனா தலைவர் பேட்டியளித்துள்ளார். இப்படித்தான் தாலிபானும் துவங்கியது.

முதலில் அரைகுறை ஆடை என்பார்கள்; அடுத்தது மேலைநாட்டு ஆடைகளை அணிவது தவறு என்பார்கள்; அடுத்தது முட்டாக்குப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பார்கள்; அடுத்தது ஆண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்கள் பணிபுரியக் கூடாது என்பார்கள்; மருத்துவர்களாக, தாதிகளாக பெண்கள் பணிபுரியக்கூடாது ஏனெனில் அங்கே ஆண்களின் கையைத் தொட வேண்டியிருக்கிறது என்பார்கள், அடுத்ததாக கல்விச்சாலைகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கக் கூடாது அது கலாச்சாரத்துக்கு இழுக்கு என்பார்கள், அடுத்தது கல்வி நிலையங்களுக்கே செல்லக்கூடாது அது பெண்களின் ஒழுக்கத்தைக் குலைத்துவிடும் என்பார்கள்.

மேலே சொன்னதெல்லாம் கற்பனையல்ல. தாலிபான் பரவும் பிரதேசங்களில் எல்லாம் இத் நிகழ்ந்துள்ளது! இப்போதுகூட பாகிஸ்தானில் தாலிபான் பரவியுள்ள இடங்களில் பெண்களின் கல்விக்கூடங்களைத் தாலிபான் எரித்து வருகிறது. இதுவரை 180க்கும் அதிகமான பெண்கள் பள்ளிகளை அவர்கள் எரித்துள்ளனர். காரணம்? “அது கலாச்சாரத்துக்கு எதிரானது”! ஆஃப்கானிஸ்தானில் கூடக் கல்விச்சாலைகளுக்குச் செல்லும் பெண்கள் மீது ஆசிட் எறிகின்றனர் தாலிபான்கள்.

இந்த நிலைக்கா நமது இந்து சமுதாயம் செல்ல வேண்டும்? மங்களூர் தாக்குதல் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்தால் இது போன்ற இருண்ட நிலைக்கே நமது சமுதாயத்தை இது இழுத்துச் சென்றுவிடும். கற்பு, கலாச்சாரம், தூய்மை ஆகியவை வெளி நிர்ப்பந்தத்தின் மூலம் வருவன அல்ல, தானாகவே சுய தேர்வின் மூலம் வருவன. இதுவே இந்து சமுதாயத்தின் தத்துவம், இதனாலேயே இந்து சமுதாயம் உலகின் உன்னத சமுதாயமகத் திகழ்ந்தது. அந்நியப் படையெடுப்புகளினால் தான் இந்தியப் பெண்கள் முக்காடு போட ஆரம்பித்தனர், அவர்களின் நிலை தாழ்ந்தது. பெண்களுக்கு ஆத்மா இருக்கிறது என்பதைக்கூட ஆபிரகாமியங்கள் ஒப்புக்கொள்ளாத காலத்திலேயே நம்மிடையே அவ்வையார்களும், ஆண்டாள்களும் தோன்றி ஆன்மீகத்தை போதித்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்றான் யுகக்கவி பாரதி. கற்பு தவறும் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்பது ஆபிரகாமியக் கருத்தியலே. இந்த ஆபிரகாமியக் கருத்தியலுக்கு இந்து அமைப்புகள், இந்து இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது.
கலாச்சாரம் நிர்ப்பந்தத்தால் வருவது அல்ல, சுய தேர்வின் மூலமும் சமூக மேம்பாட்டின் மூலமும் வருவது. அதே போன்று சில இளைஞர்கள் தாமாகவே இதுதான் இந்து கலாச்சாரம் என்று முடிவு செய்து வன்முறையில் ஈடுபடுவது நமது நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் மிகவும் கேடு விளைவிக்கும்.

நன்றி: தமிழ் இந்து வலைத்தளம்

518. உன்னதமானதொரு மகா கலைஞன் நாகேஷுக்கு அஞ்சலி

நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது (75).

சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இரு மாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.


நன்றி: தட்ஸ்டாமில்.காம்

டெயில் பீஸ்: நாகேஷ் போன்று நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டிய சாதனையாளர்களுக்கு பத்மஸ்ரீ வழங்காமல், நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கெல்லாம் (எ.கா: விவேக்) விருது வழங்கப்படுவதற்கும் அவர்கள் பரிந்துரைக்கப்படுவதற்கும், அரசியல் காரணங்கள் தாம் காரணம். வருத்தமளிக்கும் விசயம் இது.

இது குறித்து எனது சமீபத்திய இடுகை ஒன்றில் கூட எழுதியிருந்தேன்

அந்த மகா நடிகனின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்!

எ.அ.பாலா

பிற்சேர்க்கை:

சென்னை, ஜன. 31: தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் மிகச்சிறந்த நடிகராக கருதப்படும் நாகேஷ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் நாகேஷ் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு ஆகிய நகைச்சுவை மன்னர்களை அடுத்து தமிழ் திரைவுலகில் 25 ஆண்டு களுக்கு மேலாக தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நாகேஷ்.

ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர், தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் பரிமளித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் வழுக்கி விழுந்ததால் நாகேசுக்கு தலையில் அடிபட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவருக்கு ரத்தக்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறலும் இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்றிரவு மூச்சுத்திணறல் அதிகரித்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவர் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித் ததை அடுத்து அவர் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார். இன்று காலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவர்கள் வருவதற்குள் காலை 11.20 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. நாகேசுக்கு நடிகர் ஆனந்த்பாபு, டேவிட் என்கிற 2 மகன்கள் உள்ளனர்.

நாகேஷின் உடல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பில் நாகேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டுள்ளது. சூப்பர் ரஜினிகாந்த், கமலஹாசன், சோ, மனோரமா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாழ்க்கை குறிப்பு

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ் என்பதாகும். தந்தை கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். கிருஷ்ணாராவ் ரெயில்வேயில் வேலை பார்த்து வந்தார். தமிழ்நாட்டுக்கு வந்த அவர்கள், தாராபுரத்தில் தங்கியிருந்தனர். 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி பிறந்த நாகேஷ், தாராபுரத்தில் தனது இளமை பருவத்தை கழித்தார். பல இடங்களில் வேலை பார்த்த அவர், கடைசியாக ரெயில்வேயில் குமாஸ்தாவாக சென்னையில் பணி யாற்றினார்.

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுகொண்ட நாகேஷ்,அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு நாடகத்தில் வயிற்றுவலி காரணமாக அவர் நடித்ததை பார்த்து எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நாகேஷ், தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

அதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை நடிகராக வேடந்தாங்கி சிறப்பாக நடித்தார். அவருக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். இந்த ஜோடி இல்லாத படமே ஒருகாலத்தில் இல்லை என்ற நிலை நிலவியது.

கே. பாலசந்தர் கதைவசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்ர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.

திருவிளையாடல் படத்தில் சிவாஜியுடன், புலவர் தருமியாக நடித்த நாகேசுக்கு அந்த படத்தில் பெரும் புகழ் கிட்டியது. காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களில் நாகேஷின் நடிப்பு அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

தேன்கிண்ணம், நவக்கிரஹம், எதிர்நீச்சல், நீர்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

நடிகர் வீரப்பனுடன் சேர்ந்து பணத்தோட்டம் படத்தில் அவர் அடிக்கும் லூட்டிகளை பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகாதவர்கள் இல்லை என்று கூறலாம். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்பட பல படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு பிரகாசித்தது.

கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள நாகேஷ் நடித்த கடைசி படம் தசாவதாரம் ஆகும்.

நாகேஷின் இழப்பு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. முதல்வர் இரங்கல் நாகேஷின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். கலைத்துறையில் புகழ் பெற்ற சிறந்த குணச்சித்திர நடிகரான நாகேஷ் இன்றைய தினம் இயற்கை அடைந்த செய்தியினை அறிந்து பெருந்துயருற்றேன்.

தனிச்சிறப்பான நகைச்சுவையாலும், பல திறப்பட்ட நடிப்பாற்றலாலும் தமிழகத் திரைப்பட வரலாற்றில் தனக்காக ஒரு தனி இடத்தைப் பெற்றவர் அருமை நண்பர் நாகேஷ். தனிப்பட்ட முறையில் என்னிடம் மாறாத அன்பும், பாசமும் கொண்டவர். தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பேராதரவையும் மதிப்பையும் பெற்றவர்.

நாகேஷின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி: மாலைச்சுடர்.காம்

************************************
Nagesh is no more

For once, the description 'death has the last laugh' would be temptingly appropriate. For death today laid its icy hands on the greatest comedian of Tamil (perhaps even Indian) cinema, Nagesh.

And his demise must have been his eventual way of humouring death itself. But, for all we know, even death would have spilled a few tears after snatching away the smiles of an entire State.

His end came after a longish bout of ill-health He was 76, and is survived by three sons (Anand Babu, Ramesh Babu and Rajesh Babu) and five grandchildren. His wife had pre-deceased him.

Nagesh had developed some complications in his legs some six months back. After treatment, his movements were restricted.

According to family sources, he had a fall in his house a few days ago and the wound had to be stitched upon. This morning he suddenly swooned and fell down. He was rushed to a private hospital in Thiruvanmiyur where he was declared dead on arrival.

His body is kept at his St Mary's Road residence and his final rites are scheduled for tomorrow at the Besant Nagar crematorium.

Fans and big names from the film industry have started pouring in to pay their last respects in the form of sobs and tears to a man who had so far elicited only the opposite of that —— unbridled laughter and pleasant smiles.

Hailing from Karnataka, Nagesh was born Gundu Rao, a name that particularly seemed incongruent to his reedy figure. Perhaps the seeds of comedy and humour were sown right from the day he was named. It continued till a few months before he died.

His last released movie was Dasavatharam, in which he played the father to the tall Khalifullah character that Kamal Haasan played.

Dasavatharam, then again, is titularly appropriate to a career that has been all about avatars on screen. After stumbling on to films through the inevitable route of stage plays, Nagesh was quickly able to establish his credentials with his flair for organic comedy and spontaneous wit.

Though his initial inspiration was the Hollywood 'caperist' Jerry Lewis, Nagesh however grew out of his spiritual mentor by creating his own brand that had the eclectic mix of slapstick and stand-up. But his acting idiom was posited on strong grammar, and he could do adequate justice to any 'character' role.

He had worked with aplomb all the big directors, especially K Balachander and Sridhar, the two who had an innate understanding of cinema humour, and knew that Nagesh could deliver that. Nagesh was also an intrinsic part of most MGR and Sivaji Ganesan movies.

Kamal Haasan was another discerning 'humourphile' who understood Nagesh's value and talent. And it was natural Kamal was one of the earliest who arrived to pay his homage today.

Rajnikanth, another who respected Nagesh, was also at hand. Chief Minister M Karunanidhi, who himself is undergoing treatment at a hospital, shot off a condolence message.

During his active career, Nagesh was capable of inducing laughter from even the stoniest of objects. Tonight, even a stone would be teary-eyed.
*******************************
Humour was in his character

With the passing away of Nagesh, the stellar comedian, a golden era in the history of Tamil cinema comes to a close.The comedian who had the rare distinction of being a legend in his life-time breathed his last in Chennai today after a prolonged illenss.

Born as Gunddu Rao to Kannada speaking Brahmin Madhwa parents Nagesh was drawn to films even at a young age. He left his home with a firm determination that he would return only after establishing himself in some career.

His coming to Chennai, lodging in a 'single room' in West Mambalam with lyricist Vaali and veteran actor Srikanth and finding a small time job in the Railways that far from satisfied him marked the modest beginning of a star that shone with dazzling brilliance on the cine-sky for years to come.

It was when Nagesh started playing small roles in various drama troupes to keep himself busy that producer Balaji spotted him and gave him his first break in films.

Thereafter as they say there was no looking back for Nagesh whose performance after performance as the comic stole and ruled the hearts of the cine audience so much so that comedy became synonymous with the name Nagesh. Nagesh has acted in many films with Sivaji Ganesan and MGR.

His roles in Thiruvilaiyadal, Kathalika Neramillai, Thillana Mohanambal, Server Sundaram, Pattanithal Bootham, Neerkumizhi, Edhirneechal, Aboorva Raagangal, Anbe Vaa to name a few have become part of legend.

The roles which he essayed with elan and a keen sense of timing are references for aspiring and established actors. He was also a talented dancer.

Directors like Sridhar and Balachander used his potential to the full giving him roles equal to that of the leading stars of the day. His role as villainous comic pimp in Thillana Mohannambal brought to light another facet of this great actor which was put to use in Kamal Haasan's Aboorva Sahodharargal.

Incidentally his professional connection with Kamal Hassan is of great relevance. He went on to play memorable roles in Michael Madana Kama Rajan, Magalir Mattum and Nammavar with Kamal.

Kamal Hassan often said that he felt envious of Nagesh's immense talent especially wwhen he worked with Balachander. At times when Kamal found it difficult to bring out the right emotions for the camera, KB apparently used to chide him saying 'had this scene been given to Nagesh, he would have done this in the first take itself.'

Balachander once recalled how Nagesh prophesied his success while driving down Radhakrishnan salai. When KB asked him why he was driving so fast, Nagesh told him not to get scared. ' I know I am responsibile for the life and safety of one of the India's great directors.'

That was long before Balachander entered the film industry.
In the twilight of his career, Nagesh took up character roles which he essayed with equal aplomb.

For all his acting prowess, Nagesh never got his due recognition. The National awards eluded him till the end. That is perhaps the tragedy of a great performer who regaled the hearts of his audience with his art.

The Tamil film industry condoled Nagesh's death. Popular comedian Vivek, expressed shock and said, 'he was an inspiration for all comedians. He set an example for us venturing to play lead roles.'

'Skilled at both slapstick and stand-up comedy, his sheer presence on screen evoked humour,' Vivek said.

Veteran artiste Manorama, who shared the screen with Nagesh in over 100 films, said, 'I am shocked and speechless. In his death I have lost a good friend of mine. I am yet to recover from the demise of Nambiar. Now Nagesh's death has come as a double blow.'

'His subtle variations and body language are unforgettable. He was a friend and a guide to me. Also, he had been behind me during troubled times. Memories of sharing the screen with 'Sivaji' Ganesan and Nagesh still linger.'

Condoling the death of Nagesh, Nadigar Sangam president R Sarath Kumar said, 'The film industry has lost its leading light. A source of courage and inspiration for younger generation, I recall with tears my long-standing association with him.'

'I express my regret to several thousand fans of the actor across the globe and pray that his soul rests in peace'. Noted film director Vikraman, who worked with Nagesh in Poovae Unakkaga said, 'he was a thorough professional.

He co-operated us well in Poovae Unakkaga. He was simple and down-to-earth despite his achievements. A man who constantly improvised on the sets, Nagesh would be sorely missed'.

Merit list

Panchathanthiram (2002)
Michael Madana
Kamarajan (1991)
Apoorva Sahodarargal
(1989)
Thillu Mullu (1981) - Nagesh
Ethir Neechal (1968) -
Maadhu
Thillana Mohanambal (1968)
Anubavi Raja Anubavi
(1967)
Bama Vijayam (1967)
Anbe Vaa (1966)
Major Chandrakant (1966)
Thiruvilayadal (1965) -
Tharumi
Kadalikka Neramillai (1964)
Server Sundaram (1964)
Galaattaa Kalyaanam
Ooty Vari Uravu
Neerkkumizhi


Courtesy: http://newstodaynet.com

Monday, January 26, 2009

517. ஹர்பஜனுக்கும் விவேக்குக்கும் பத்மஸ்ரீ விருது ஒரு கேலிக்கூத்து!

ஹர்பஜனுக்கும் விவேக்குக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படி தகுதி குறைந்தவர்களுக்கு உயரிய விருதுகள் தரும்போது, ஏற்கனவே இவ்விருது பெற்றவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. அவர்கள் இருவரும் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

நடிப்பையே தங்களது மூச்சாகக் கொண்டு, நடிப்புக்காக 3 தேசிய விருதுகளை வாங்கிய கமல்ஹாசனும், மம்முட்டியும், மோகன்லாலும் பத்மஸ்ரீ, தத்துபித்து காமெடி பண்ணும் விவேக்கும் பத்மஸ்ரீ. என்ன ஒரு கொடுமை :-( நமது முதல்வர் தான், தன்னை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைத்ததாக விவேக்கே கூறியுள்ளார். அவருக்கு என்ன அரசியல் கட்டாயமோ, பாவம் ;-)

அசாத்திய திறமை பெற்ற, பழம்பெரும் நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கையில், விவேக்கை பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன ? சட்டென்று மனதுக்கு வருபவர் நாகேஷ், அவரை விடவா விவேக் (என்னும் பொடியர்) சாதித்து விட்டார்? திறமைக்கு மரியாதை இல்லாத ஒரு சூழல் இது.

அடுத்து, ஹர்பஜன் சிங். ஒரு விளையாட்டு வீரர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இளைஞர் இவர்! ஒரு மோசமான ரோல் மாடல். அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்கவும் இல்லை. ஒரு வி.வி.எஸ் லக்ஷ்மண் சாதித்ததை விட இவர் என்ன சாதித்துக் கிழித்து விட்டார் ? பத்மஸ்ரீயை இதை விட கேவலப்படுத்த முடியாது.

இறுதியாக, அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேற பாயிண்ட்ஸ்மேன் (pointsman) ஆக இருந்து, அரசுக்கு ஜால்ரா அடித்த ஒரே காரணத்துக்காக அனில் ககோத்கருக்கு பத்மவிபூஷன். எல்லா விசயங்களிலுமா அரசியல், ஊழல் இந்த நாட்டுல, சே !?!?

இது பத்மா விருதுகள் லிஸ்ட்

எ.அ.பாலா

Sunday, January 25, 2009

516. சோ சொன்னார் - வாலி செய்தார் !

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் சோ கூறியதற்கு ஏற்றாற்போல, வாலி முதல்வரை வானாளவிய உயரத்துக்குப் பாராட்டி இருக்கிறார் ! இதையெல்லாம் விமர்சனம் பண்ணக் கூடாது. ரசித்து விட்டு போய்க்கினே இருக்கணும், விடு ஜூட் ;-)

ஒபாமா ஒப்பாகுமா: கருணாநிதிக்கு வாலி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 25, 2009, 11:29 [IST]

சென்னை: சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய். அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா. சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா? என்று முதல்வர் கருணாநிதிக்கு கவிஞர் வாலி புகழாரம் சூட்டினார்.

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தமிழர் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சங்கத் தமிழ் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழை செம்மொழியாகவும், தை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும் அறிவித்த முதல்வரை பாராட்டி கவிதை முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கவிஞர் வாலி தலைமை தாங்கினார். புலவர் புலமைபித்தன், கவிஞர்கள் பழனி பாரதி, பா.விஜய், தமிழச்சி தங்கபாண்டியன், இளந்தேவன், கபிலன், விவேகா, நெல்லை ஜெயந்தா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தார்கள்.

காலை 11 மணிக்கு வந்த முதல்வர் கருணாநிதி, இரண்டரை மணி நேரம் நிகழ்ச்சியை ரசித்து பார்த்தார்.

மத்திய அமைச்சர் ராஜா, மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, கோ.சி.மணி, எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் கனிமொழி, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் இதை கண்டு களித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கத் தமிழ் பேரவை தலைவர் துரைமுருகன், செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் செய்திருந்தனர்.

கவிஞர் வாலியின் கவிதை ..

தமிழ் வணக்கம், தமிழின தலைவர் வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்.
வைப்பேன் என் தலைவனுக்கு மட்டும் ஒரு வணக்கம்.

எவரேனும் என்னுவரோ தலைவன் வேறாக, தமிழ் வேறாக. தலைவரல்லவா இருக்கிறார் தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே உன் வருகை, கண்டதும் தூக்குவேன் என் இருகை.

உயரிய தலைவா உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வாயை திறந்தால் தான் என் வாய்க்கும் கவிதை வாய்க்கும்.

என் பாட்டுக்கு நீதான் பிள்ளையார் சுழி.
உன்னை முன் வைக்காமல் என்ன எழுதினாலும்,
என் பாட்டு வாங்கும் பெரிய சுழி.

அருமை தலைவா,
ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்.
தேர்தலுக்கு தேர்தல் 5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய அஞ்சுக செல்வா.

தேர்தல் வரலாற்றில் உன்னை வெகுவாக விமர்சனம் செய்ய டில்லியில் ஒரு கோபால்சாமி,
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ இந்த 2 கோபால்சாமிகளையும் புறம் தள்ளிய கோபாலபுரத்து சாமி.
எனவேதான் கும்மாளமிட்டு உன்னை கொண்டாடுகிறது இந்த பூமி.

அய்யா,
50 ஆண்டு காலம் உன் சேவடிபட்ட சபை சென்னை சட்டசபை.
நாவில் தமிழ் ஏந்தி நீ நற்றமிழ் இட்ட சபை.
முதல் முதல் தேர்தல் குளத்தில் குளிக்க நீ தொடங்கிய ஊர்தான் குளித்தலை.
குளித்தலைக்கு பிறகு இதுவரை குனியா தலை உன் தலை. இனியும் குனியாது வெற்றியை குவிக்கும் என்பதும் உன் தலை.

சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா.
சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா?.

உன்னை விட்டு வலது போனால் என்ன, இடது போனால் என்ன.
மேலே விழுந்த நரி பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது நடு நிலைமை.
நடுநிலைமை தான் நல்ல தலைமை.
கலைஞர்கோனே,
கருப்பு கண்ணாடி அணிந்த கவி வெண்பாவே.
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால் உன் பின்னே நகர்கிறது நகர்.

நிஜம் சொன்னால், ரஜினியை விட நீயொரு வசீகரமான 'பிகர்'.
நாவினிக்க நாவினிக்க உன்னை பாடியே என் உடம்பில் ஏறிபோனது சுகர்.
நீ எங்கள் கிழக்கு, உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு.
நம்மொழி செம்மொழி, அதனை அங்கீகரிக்காது நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய் உடனே குனிந்தது அதன் சிரசு.
அதுபோல் தமிழனின் அடையாளங்களை வட்டியும், முதலும் சேர்த்து வள்ளலே நீதான் மீட்டாய்.

தரை மீனை திரும்ப தண்ணீரில் போட்டாய்.
அதனால் தான் அய்யா உன்னை அவருக்கு நிகர் அவர், தமிழனை துன்பம் தீண்டாது மீட்கும் தடுப்பு சுவர்.
மையம் ஏற்கும் வண்ணம் உன்னிடம் உள்ளது பவர்.
அத்தகு பவர் உன்போல் படைத்தவர் எவர்.

அமைச்சர் பெருந்தகை ஆற்காட்டாரிடம் உள்ள பவரால், வீட்டு விளக்கு எரியும், நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா உன்னிடம் உள்ள பவரால் தான் நாட்டு விளக்கு எரியும், நற்றமிழ் பாட்டு விளக்கு எரியும்.

குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள் ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது, அடுப்பு விளக்கு, அன்பு விளக்கு, அமைதி விளக்கு, அறிவு விளக்கு என பல்விளக்கை இன்று, உன்னை பணித்து வாழ்த்தி சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா, உனக்கு தருவேன் கேள் ஒரு வெண்பா.

நன்றி: தட்ஸ்டாமில்.காம்

ஒரு சந்தேகம்: தற்போது பத்மபூஷன் விருது பெற்றிருக்கும் ஜெயகாந்தன் அவர்களையும் பாராட்டி வாலி கவிதை பாடுவாரா ? அது வெண்பா ஸ்டைலில் இருந்தால் இன்னும் விசேஷம் :-)
அப்பாடி, ஜெ.கா விருது பெற்ற விசயத்தையும் தமிழ் கூறும் நல் உலகுக்கு அறிவிச்சாச்சு!

515. "மின்னல்" கவிதைகள் - விருந்தினர் இடுகை

பதிவர் "மின்னல்" எனது திருப்பாவை இடுகைகளின் வாசகி. 30 திருப்பாவை இடுகைகளுக்கும் பின்னூட்டம் இட்டு இருக்கிறார், வாசித்துத் தான் இட்டாரா என்று தெரியாது ;-) எது எப்படியிருப்பினும், நன்றிக் கடனாக அவர் எழுதிய கவிதைகளுக்கு என் வலைப்பதிவில் விளம்பரம் தருவது என்று முடிவெடுத்து விட்டேன் :-)

நான் கவிதை அதிகம் வாசித்ததில்லை, அதனால், அது குறித்து அதிகம் தெரியாது. இந்த இடுகை, கவிதை ரசிக்கும் என் வலைப்பதிவு வாசகருக்காக! மின்னலின் மற்ற கவிதைகளை அவரது வெள்ளித்திரையில் காண்க :)

எ.அ.பாலா

*******************************************************
குடைக்குள் வானம்

உனது குடை விரிப்புகளில் சட்டென

அடங்கியது எனக்கான வான்

தனித்திருத்தல்

நிசப்தம் மழையென
நிரம்பி வழிந்த ஓரிரவில்
உன்னோடு பேசிக் கொண்டிருந்தேன்
என்னோடு துணையாக
தனிமை மட்டும்

வானுக்கு வண்ணமேற்றுதல்

உன் மூச்சு காற்றின்
வெம்மையில்
விரிந்து ப‌ரந்திருந்த‌து
என் வான‌ம்

குறித்த‌ நேர‌த்திற்கு
ஒரு நிமிட‌ம் முன்ன‌மே
ஓடிச் சென்று
ஒளிந்து கொண்டாய்
உன் க‌ட‌வுள‌ரிட‌ம்

நீ விட்டு சென்ற‌
ஒற்றை செருப்பையும்
சில்லென்ற‌ சிரிப்பையும்
தேடிக் கொண்டிருந்த
க‌ண‌த்தில் வெடித்து
சித‌றிய‌தென் வான‌ம்

தெறித்த மேக‌த்தின்
ஒரு துக‌ள் விழி வ‌ழி க‌ரைந்த‌து
ம‌று துக‌ள் உயிர் க‌ல‌ந்த‌து
ம‌ற்றுமொன்று நெஞ்ச‌ம் நிறைத்த‌து
அவ‌ச‌ர‌மாய் ஒரு துக‌ளை ம‌ட்டும்
கையோடு இறுக்கினேன்

எப்போதாவது
மீண்டும் வரையபடுமென்
வானத்திற்கு
வண்ணமேற்றுவேன்
அத்துகள் கொண்டு

நிதர்சனம்

கரை புரண்ட வெள்ளமாய் காவேரி
கடக்க கிடைப்தென்னவோ கொள்ளிடம் மட்டுமே...

திரும்ப கிட்டாதவை

சிறுவயதில் அம்மாவிடம்
அடிவாங்கி தந்த‌
தொலைந்த‌
ஒற்றை கால் கொலுசு

தேர்வு நேரத்தில்
திருடு போன‌
சிற்பியாய்
செதுக்கிய குறிப்பேடு

தேர்ந்த ரசனையோடு
தேடித் தேடி தெரிவு செய்த
பூப்போட்ட‌ கைக்குட்டைக‌ள்

பிடித்த‌வ‌ரின் பெய‌ரையும்
ப்ரிய‌த்தையும்
ஒருசேர‌நினைவுப‌டுத்தும்
சாவிக்கொத்து

ம‌ன‌ன‌ம் ஆகாத
அழைக்க‌ப‌ட‌ வேண்டிய‌
அனைவரின் எண்ணும்
தன்னுள் அடக்கிய
தொலைந்து போன‌
கைபேசி

ப்ரிய‌மான‌வ‌ர்
அசாதார‌ண‌மாக‌ அளித்த
அழ‌கான‌ பேனா

க‌ண்ணும் மனமும்
க‌வ‌ர்ந்த‌வ‌ரிட‌ம்
லயித்த ம‌ன‌ம்

மேலும்.....

அவ‌ர் பிரிய‌த்தில்
மீண்டும் மீண்டும்
தொலையும்
நான்

காற்றை மொழி பெயர்த்தல்

காற்றை உதிர்த்து
மொழிப‌டைத்தேன்
உன்
காதில் மோதி
நொறுங்கி விழுந்த‌ன‌‌
வாக்கிய‌ங்க‌ள்
கையோடு மிஞ்சிய‌து
சித‌ல‌மான‌
க‌ற்றை சொற்க‌ள்

எல்லை

அழகிய கோலங்கள் கூட

வாசல் தாண்டி உள் வருவதில்லை

நீராலானது

தொடங்கவுமில்லை முடிக்கவுமில்லை
தயங்கவுமில்லை தடங்கலுமில்லை
கலக்கமுமில்லை கலங்கலுமில்லை
நீராலானது நம் உறவு

காட்சிப் பிழை

எத்தனை முயன்றாலும் மிதக்கும் நிலவின்
கறையை அகற்ற முடியவில்லை நதியலையால்

தினசரி சோம்பல்

தேனீர் மேசையில் சிதறி

கிடக்கும் நாளேடுகள்

சமையல் அறையின்

நீண்ட நாள் பிசுக்கு

உணவு மேசையில் அலுவல்

சம்மந்தப்பட்ட கோப்புகள்,

வார இதழ்கள், சுவைக்கும்

கவிதைகள், எழுத்துக்கள்

சுவரோரத்து ஒட்டடைகள்

தொலைக்காட்சி பெட்டியின்

தூசி படலம்

தினந்தோறும் சோம்பல்

விருத்தினர் வரும் போது

சுத்தமாகும் வீடு

மீண்டும் தினசரி சோம்பல்

மற்றுமொரு விருந்து வரை

புகைவண்டி கவிதைகள்

குறித்த நேரத்தில் வருமென்று தெரிந்தாலும்

தண்டாவளத்தின் தொடுவானத்தை

அடிக்கடி எட்டிப் பார்க்கும் பேதை மனம்


---------------

புகைவண்டி வந்து போன நடைமேடை

போல வெறுமை சூழுலும்

நம் ஒவ்வொரு சந்திப்பின் முடிவும்

------------------

புகைவண்டி உதிர்த்துவிட்டு போன

மனிதர்கள் போல திசைக்கொன்றாய்

நினைவுகள்

Saturday, January 24, 2009

514. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

படங்களின் மீது சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்!




Tuesday, January 20, 2009

513. ஒபாமா "கிறுக்கு" பிடித்த "மேல்தட்டு" இந்திய மீடியா

இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ள ஒபாமா பதவி ஏற்பு விழாவை இந்தியாவில உள்ள பல செய்திச் சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன். டிவி சேனல்களை ஸ்கேன் செய்து பார்த்ததில், சன் மியூசிக், SS மியூசிக் தவிர முக்கால்வாசி சேனல்களில் ஓபாமா புராணம் தான் ஓடுகிறது :) ஒபாமா இந்தியப் பிரதமர் ஆனாரா, அமெரிக்க ஜனாதிபதி ஆனாரா என்று சந்தேகமாக உள்ளது! ரொம்ப முடியல, அதனால் தான் டிவியை அணைச்சிட்டு இந்த பதிவெழுத உட்கார்ந்தேன்!

சரி ஒளிபரப்பட்டும், தவறொன்றும் இல்லை, அதுக்காக, இந்தியா ஏதோ அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கின ஒரு ராக்கெட் மூலம் ஒரு வெட்டு விளிம்பு (cutting edge) தொழில்நுட்ப செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கு முன் செய்யப்படும் count down க்கு இணையான ஒன்றைச் செய்து, நமது இந்திய டிவி மீடியா அடித்த கூத்து தாங்க முடியாத ஒன்றாக இருந்தது!

அமெரிக்கர்களும், அங்குள்ள மீடியாவும், ஒபாமாவைக் கொண்டாடுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அங்கு ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கிறதாக வைத்துக் கொள்ளலாம், ஒரு தேர்தல் மூலமாக.

இந்தியாவைப் பொருத்த அளவில், ஒபாமா இன்னொரு அமெரிக்க அதிபர், அவ்வளவு தான். அவரால், இந்தியாவுக்கு எந்தவிதமான பயனும் இல்லை, உதவியும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், ஆப்பு உண்டு என்று தெரிகிறது. ஏனெனில், அவரது outsourcing க்கு எதிரான நிலைப்பாடு நாம் அறிந்த ஒன்றே.

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இங்க ஒரு தலித் ஜனாதிபதியா / உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியா ஆனபோது கூட நம்ம மீடியால பெரிசா எழுதல, இப்ப ஏன் இப்டி ஒபாமா பைத்தியம் பிடிச்சு அலையறாங்க என்பது தான் முக்கியமான கேள்வி. அமெரிக்க ஜனாதிபதியும், இந்திய ஜனாதிபதியும் ஒரு தட்டில் வைத்துப் பார்க்க முடியாது தான். ஆனால், ஜனநாயகத்தில் ஒரு உயர்ந்த பதவிக்கு வருவதற்கு, ஒப்பீடு செய்யப்படும் இருவருமே சந்தித்த எதிர்ப்புகள், உழைத்த உழைப்பு, செய்த தியாகங்கள் என்று பார்த்தால், பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது என்கிறேன்!

அது போலவே, ஒரு பெண், ஒரு தலித் என்ற வகையில், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்திற்கு முதலமைச்சராக மாயாவதி தேர்தலில் வெற்றி பெற்று வந்தபோது, மீடியாவில் இப்போது காணப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு 10% கூட இல்லை என்பது உண்மை. இந்தியச் சூழலில், ஒரு தலித்தாக இருந்து கொண்டு, அனைவரையும் அரவணைத்து மாயாவதி பெற்ற வெற்றி மகத்தானது, அவர் சற்று சர்வாதிகாரத்தனமாக சில விசயங்கள் செய்தாலும் கூட!

பொதுவாக, மேல்தட்டு மனப்பான்மை மிக்க இந்தியச் சூழலில் மீடியாவும், அறிவுஜீவிகளும் ஒபாமா புராணம் பாடுவது அதீதமாக / போலியாக, ஏன் சற்று ஆபாசமாகக் கூடத் தெரிகிறது!!! இங்கு மேல்தட்டு எனும்போது உயர்சாதிகள் / ஓபிசியில் உள்ள சிலபல சாதிகள் என்று ஆதிக்க சாதிகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்! இப்படிப்பட்ட சூழலில், ஒரு தலித் அரசியலில் / சமூகத்தில் முன்னுக்கு வந்து வெற்றி பெறுவது தான் இந்தியர்களான நாம் கொண்டாட வேண்டிய ஒன்று. இந்த சமயத்தில் சரத் என்ற IIM ல் படித்த மாணவரைப் பற்றி நான் எழுதிய பதிவு ஞாபகத்துக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை!

எ.அ.பாலா

Monday, January 19, 2009

512. இந்திய-இலங்கை கிரிக்கெட் இந்த சூழலில் தேவையா?

இன்னும் ஒரு வாரத்தில், இந்திய கிரிகெட் அணி, 5 ஒரு நாள் பந்தயங்களில் விளையாட இலங்கை செல்லவிருக்கிறது. இப்போது இது தேவையா என்ற கேள்வி எழுகிறது. முக்கியக் காரணம், போரினால், ஈழத்தமிழர் பெரும் அவதிக்குள்ளாகி, உயிரிழப்புகளும், அவலமும் மலிந்திருக்கும் சூழலில், BCCI மேலும் பணம் பண்ணுவதற்கு இப்படி ஒரு வாய்ப்பு அரசு தர வேண்டுமா ? தமிழ் நாட்டு உணர்வுகளை மதிக்காத இந்த கிரிக்கெட் தமாஷா அவசியமா ?
மத்திய அரசுக்கு அடிப்படையான விஷயங்கள் கூட புரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதோடு, கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு பற்றியும் பார்க்க வேண்டும். இலங்கையிலிருந்து திரும்பிய வெளியுறவு செக்ரட்டரி அங்கு என்ன பேச்சு வார்த்தை நடத்தினார், என்னத்தை சாதித்தார் என்று தெரியவில்லை. மீடியாவை சந்திக்காமலேயே சென்னை விமான நிலையத்திலிருந்து தில்லிக்கு எஸ்கேப் ஆகி விட்டார். தமிழக அரசிடம் பேசினாரா / ஏதாவது தகவல் கொடுத்தாரா என்றும் தெரியவில்லை.

Sunday, January 18, 2009

511. திருப்பாவை - சொல்லாட்சி குறிப்புகள்

திருச்சேவைக்கான திருவருள் அல்லது மோட்சம் என்பதை உட்பொருளாகக் கொண்ட ”பறை” என்ற சொல் 11 பாசுர வரிகளில் உள்ளன

நாராயணனே நமக்கே பறை தருவான் - பாசுரம் 1
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு - பாசுரம் 8
போற்றப் பறை தரும் புண்ணியனால் - பாசுரம் 10
அறை பறை மாயன் மணி வண்ணன் - பாசுரம் 16
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் - பாசுரம் 24
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் - பாசுரம் 25
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே - பாசுரம் 26
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் - பாசுரம் 27
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்  - பாசுரம் 28
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா - பாசுரம் 29
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை - பாசுரம் 30


 (பரமபதம் வேண்டும் கடை 7 பாசுரங்களிலும் ”பறை” தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ளதை கவனிக்கவும்)

******************************************************************
கண்ணனின் தந்தையான நந்தகோபர், திருப்பாவையில் 5 முறை போற்றப்படுகிறார்.

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* - பாசுரம் 1

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய* கோயில் காப்பானே - பாசுரம் 16

எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்* - பாசுரம் 17

நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்* - பாசுரம் 18

ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்* - பாசுரம் 21

*************************
யசோதாவுக்கு 2 தடவை மங்களாசாசனம்:

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் - பாசுரம் 1

எம்பெருமாட்டி ''யசோதாய் அறிவுறாய்* - பாசுரம் 17

*****************************
ஸ்ரீயைக் குறிக்கும் "செல்வம்" 7 பாசுர வரிகளில் வருகிறது. புருஷகாரம் இன்றி பரமனைச் சேர முடியாது என்பதை ஆண்டாள் இப்படி உணர்த்துகிறாள் போலும் :)

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் "செல்வச் சிறுமீர்காள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி *நீ-

நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்*

செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா*

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*

*************************

நப்பின்னை பிராட்டி: 3 பாசுர வரிகள்

நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்*

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்*

நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்*

**********************
த்ரிவிக்ரம அவதாரம் 3 இடங்களில்:

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி* - பாசுரம் 3

அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே - பாசுரம் 17

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி! - பாசுரம் 24

****************************
நாராயணன்: 3 பாசுர வரிகள் (நாராயண, நாராயண, நாராயண!)

நாராயணனே நமக்கே பறை தருவான்*

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி*

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்*

*************************
கோவிந்தா: 3 பாசுர வரிகள் (கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா!)

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன்தன்னைப்-

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*

********************
மாயன்: 4 பாசுர வரிகள்

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்*

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று*

வல்லானை* மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்*

*****************
கேசவன் என்ற் திருநாமம்: 2 பாசுர வரிகள்

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ*

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை*

***************************

மணிவண்ணன்: 2 பாசுர வரிகள்

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்*

மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்*

**************************
மாதவன்: 2 பாசுர வரிகள்

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று*

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை*

************
பரந்தாமனின் திருச்சங்கானது (பாஞ்சஜன்யம்) திருப்பாவையில் 5 இடங்களில் பாடப் பெற்றுள்ளது.

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ*

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்*

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே

******************************
பரமனின் அருள் பொழியும், தாமரை மலரை ஒத்த, சிவந்த திருக்கண்கள் 4 தடவை பாடப்பெற்றன!

கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்* - பாசுரம் 1

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ* - பாசுரம் 22

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்* - பாசுரம் 30

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். - பாசுரம் 14

******************************
பரமனின் திருவாய்: 3 பாசுர வரிகள்

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்*

வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்*

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*

*****************
பரமனின் திருவடி: 3 பாசுர வரிகளில் வருகின்றது

ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே*

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி*

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*

************************
போற்றி (பல்லாண்டு பாடுதல்): 7 பாசுர வரிகள்

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி*

சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி*

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி*

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி*

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி*

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி*

*****************************
மாட்டைக் குறிக்கும் சொற்கள் (பசு, எருமை, கறவை, பெற்றம்..) 7 பாசுர வரிகளில் இடம் பெற்றுள்ளன!

வாங்க * குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்*

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு*

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து*

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி*

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து

*************************
கண்ணன் அவதரித்த "ஆய்/ஆயர்" குலம், 5 பாசுர வரிகளில் வருகின்றன.

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்*

மணிக் கதவம் தாள் திறவாய்* ஆயர் சிறுமியரோமுக்கு*

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*

வாச நறும் குழல் ஆய்ச்சியர்*

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்*

*********************
"பால்" என்ற பதம் 6 பாசுர வரிகளில் பாடப் பெற்றது.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*

நினைத்து முலை வழியே நின்று 'பால்' சோர*

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்*

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே*

பாற்கடலுள்- பையத் துயின்ற பரமனடி பாடி*

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*

**********************************
"முலை" என்ற் பதம் 4 இடங்களில் இடம் பெற்றது.

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி - பாசுரம் 3

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு* - பாசுரம் 6

நினைத்து முலை வழியே நின்று பால் சோர* - பாசுரம் 12

செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்* - பாசுரம் 20

****************************
"மழை/மாரி" 4 பாசுர வரிகளில் காணக் கிடைக்கின்றன.

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து*

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்*

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்*

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*

******************
கோயில்: 4 பாசுர வரிகள்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்*

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்*

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய*கோயில் காப்பானே.

உன்-கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் *

******************
விளக்கு: 5 பாசுர வரிகள்

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்*

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்*

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே*

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்*

கோல விளக்கே கொடியே விதானமே*

*************************
பிள்ளை/பிள்ளாய் என்ற சொற்பதங்கள் 5 பாசுர வரிகளில் இடம் பெற்றுள்ளன.

பிள்ளாய்
எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு*

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி*

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்*

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்*

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை*

**************************
மார்கழி: 3 பாசுர வரிகள்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்*

**************************
திங்கள் என்ற சொல்: 4 பாசுர வரிகள்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து*

திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்*

திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி*

*******************
ஆழ்வார்கள் உகந்த "தாமரை": 5 பாசுர வரிகளில் இடம் பெற்றுள்ளன.

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப*

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*

பைங்கமலத்
தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன*

*********************************
மலர் என்ற சொல்: 3 பாசுர வரிகள்

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்*

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*

வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்*

*****************************
பெண்ணின் (யசோதா, துயிலெழுப்பப்படும் கோபி, நப்பின்னை) கண்ணின் அழகு 3 இடங்களில் பாடப்பட்டது.

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்* - பாசுரம் 1

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்* - பாசுரம் 13

மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை* - பாசுரம் 19

********************

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails